Wednesday, 12 March 2014






வேர்கள் வெளியே தெரிவதில்லை

 
தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மகளீர் தின விழா 2014
வேர்கள் வெளியே தெரிவதில்லை தலைப்பில் 

எங்கள் சகோதரி மெல்பா எழுதி  வாசித்த கவிதை

மெத்த படித்தவன்
செருக்கோடு கூறினான்
தோட்டத்து செடியிலே
கிளை இருக்கிறதாம்
கிளையில் இலை இருக்கிறதாம்
இலைகருகே பூ இருக்கிறதாம்
பூவுக்குளே காய் இருக்கிறதாம்
காய்க்குள்ளே கனி இருக்கிறதாம்
வசந்த காலத்தில் செடியில்
வளங்கள் அனைத்தும்
ஒருநாள் தெரியும்
ஆனால்
அத்துனைக்கும் மூலகாரணமாக
அடித்தளமிடும்
வேர்கள் வெளியே தெரிவதில்லை
ஆம் நாங்களும் அப்படித்தான்
நாங்கள் வேர்கள்
வெளியே தெரிவதில்லை

நாங்கள் பட்டுவிட்டால்
மேற்கான் யாவும் சருகுகளே.
இச்சமூகமும் அப்படித்தான்
நாங்கள் இல்லாததைப்போல்
சித்தரிக்கிறது.
ஆனால் அதற்கு தெரியவில்லை
நாங்கள் தான் அதை தாங்கும்
வேர்கள் என்று
அப்படியே தெரிந்தாலும்
நாங்கள் வெளியே தெரிவதில்லை
ஆம் நாங்கள் வேர்கள்
வெளியே தெரிவதில்லை
இலைகள் உதிர்ந்த போதும்
பூக்கள் காய்ந்த போதும்
கனிகள் பறிக்கபட்ட போதும்
இவைகள் தங்கள் பணியை
முடித்த பின்னும்
நாங்கள் எங்கள் பணியை
நிறுத்துவதில்லை -என் எனில்
நாங்கள் வேர்கள்
வெளியே தெரிவதில்லை
வெயிலோ மழையோ
எதுவாகிலும எமக்கு
ஓய்வில்லை - எப்போதும்.
எல்லோருக்கும் பணிநேரம்-உண்டு
எமக்கு எல்லா நேரமும்
பணிநேரம் தான் -ஆம்
நாங்கள் வேர்கள்
வெளியே தெரிவதில்லை

வெளி உலகை பார்க்க
ரசிக்க எங்களுக்கும்
ஆசையுண்டு - ஆனால்
மரத்தை வெட்டியபின் தான்
எங்களுக்கும் அது கிடைக்கும் என்பதால்
அதில் எங்களுக்கு உடன்பாடில்லை
எங்கள் ஆசைகளும் எண்ணங்களும்
வேர்களைப்போல்
வெளியே தெரியாமல்
மண்ணிலேயே புதைக்கப்படுகின்றன.
ஆம் சிறு நாற்றானாலும
வேர்களை புதைக்கிறார்கள் ………………………
நாங்கள் புதைக்கப்படுகிறோம்
என்றாலும் என்றும்
அழிக்கப்படுவதில்லை -
எங்களை அழித்தால் உலகே அழிந்துவிடும்
ஆம் நாங்கள் வேர்கள் வெயியே தெரிவதில்லை